Friday, 20 May 2011

ரவா பொங்கல்






ரவை - 1கப்
பாசிப்பருப்பு  - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
முந்திரி - 6
நெய் - கால் கப்

செய்முறை :

* பாசிப்பருப்புடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
* வாணலியில் சிறிது நெய் சேர்த்து ரவையை சிவக்க வறுக்கவும்.
* அதில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து ரவை நன்றாக வேகும் வரை கிளரவும்.
* ரவையுடன் வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்.
* நெய்யில் கடுகு, சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
* பொங்கல் கலவையுடன், தாளித்தவை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.

மனம் மயக்கும் ரவா பொங்கல் தயார்.

குறிப்பு

சில நண்பிகள் காரட் பச்சை பட்டாணி பீன்ஸ் சேர்ப்பது உண்டு ஆனால் எனக்கு பிடிப்பது இல்லை

அல்லது
பயத்தம் பருப்பை வேகவைத்து அதில் கொதித்த 5 கப் தண்ணீரை கலந்து வடிகட்டி அந்த பருப்புநீரைக்கொண்டும் செய்யலாம்.


குறிப்பு - 2


ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க
செய்முறை
___________
*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.

வெண் பொங்கல்




வாங்க வெண் பொங்கல் சாப்பிடலாம்

பச்சை அரிசி 200 கிராம்.
பாசிப் பருப்பு 50 கிராம்
சீரகம்
மிளகு
நெய்
முந்திரி
இஞ்சி
கறிவேப்பிலை
ரொம்ப எளிமையா செய்யலாம், முதலில் அரிசியை நன்றாக நீரில் கழுவி 1:2 அளவில் தண்ணீர் கலக்கனும். அதாவது அரிசி(200 கி)+பருப்பு(50 கி) ஒரு பங்கு எனில் அதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் + மேலும் அரை கிளாஸ் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட வேண்டும். வழக்கமாக சாதம் வேக வைக்க விடும் விசிலை விட அதிகமா 5-6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் அதாவது நன்கு குழைய விட வேண்டும்.
குக்கரில் இருப்பதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் பிரையிங் பேனில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகமும் மிளகும் போட்டு பொன்நிறமாக வறுத்து சாதத்துடன் கொட்டி கிளற வேண்டும். பின் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொட்டவும். சுவையான வெண்பொங்கல் தயார். தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் சாம்பார், அல்லது கெட்டியான தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். மெது வடை கூட இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
வடகறி இன்னும் நன்றாக இருக்கும்.





வெல்லபொங்கல்

                                    





                                       வெல்லபொங்கல்

சர்க்கரை பொங்கல் அல்ல இது அணுவின் வெல்லபொங்கல்


வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்.  
பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு
பாகுவெல்லம்—பொடித்தது—2 கப்
நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்–5   பொடித்துக் கொள்ளவும்
முந்திரி,   திராட்சை–விருப்பத்திற்கு
குங்குமப்பூ–சில இதழ்கள்
ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை   வாஸனைக்கு
பச்சை கற்பூரம் சிறிது சேர்த்து பாருங்கள் மனம் ஆஹா என்று இருக்கும்

பால்—-அரைகப்
செய்முறை——.வாணலியைச் சூடாக்கி  அரிசி, பருப்பை தனித்தனியே
வாஸனை வரும்படி சற்றுச்   சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை, இரண்டு  மூன்று முறை   ஜலம் விட்டுக் களைந்து
இறுத்து  ,    இரண்டரைகப்  ஜலமும்  அரைகப் பாலையும் சேர்த்து
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் அடங்கியவுடன்  குழிவான கரண்டியினால் வெந்தவற்றை
நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில்   வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-
-கிளறி, கெட்டியான பாகாக்  காய்ச்சி  மசித்த அரிசி,  பருப்பில்
சேர்த்து,  நிதான தீயில்   ஒன்று சேரக் கிளரவும்.
கலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில்  இறக்கவும்.
பாகு காயும் போதே ஏலக்காய்,   குங்குமப்பூ,பச்சை கற்பூரம்,ஜாதிக்காய்ப்பொடி
இவைகளைச்  சேர்த்து விடலாம்.
நெய்யில் முந்திரி,  திராட்சையை வறுத்துப் போட்டு  தேனையும்,
நெய்யையும் சேர்த்துக் கலக்கவும்.
நெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய்,   பச்சை கற்பூரம் முதலானது
கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.
அடுத்து    வெங்கலப் பானையில் பாலும்  ஜலமுமாகக்   கொதிக்க
வைத்து   வறுத்த அரிசி, பருப்பை   சுத்தம் செய்து வேக வைத்து
மசித்து ,  வெல்லம் சேர்த்துக் கிளறி,   மற்ற சாமான்களையும்சேர்த்து
நன்றாக  இருகும்வரை   கிளறி நெய்விட்டு  இறக்குவதும்  ஒரு முறைதான்.
கடலைப் பருப்பு  சிறிது   பருப்பு வறுக்கும் போது சேர்ப்பதும் உண்டு.
பாகு வைத்து சேர்க்கும் பொங்கலில்  அடி பிடித்துவிடுமோ என்ற அச்சம்
குறைவு.
அரிசி சாதம் செய்ய வைக்கும் அளவிற்குச் சற்று கூடுதலாகவே
ஜலம்    பொங்கலுக்கு வைக்கவும்.
பாஸ்மதி அரிசியைவிட பொன்னி போன்ற அரிசி வகைக்கு  ஒரு
பங்கு அரிசிக்கு,   மூன்று பங்கு ஜலம் தேவையாக இருக்கிறது.
அரிசி ரகத்தை மனதிற்கொண்டு ,  ஜலம் சேர்க்கவும்.
இனிப்பும் விருப்பத்திற்கிணங்க   கூட்டி,  குறைக்கலாம்.
பொங்கல் பானைக்கு   அலங்காரம் செய்வதுபோல   குக்கருக்கும்
மஞ்சள் கட்டி  குங்கும  அலங்காரம் செய்து,
ஹாட் ப்ளேட்டானாலும், காஸ் அடுப்பானாலும் அதற்கும்
கோலம் போட்டு பொங்கலைக்  கொண்டாடுவதுதான்
இப்பொழுது வழக்கமாக உள்ளது.
எது சௌகரியமோ அதன்படி   இனிப்பான பொங்கலைச் செய்வோம்
வெல்லம்  நிறத்தின்படிதான்  பொங்கலின் கலரும் அமையும்.








Tuesday, 10 May 2011

அசோகா அ‌ல்வா

தேவையானவை

பா‌சி‌பபரு‌ப்பு - 1 க‌ப

கோவா - அரக‌ப
மைதா - கா‌லக‌ப
ச‌‌ர்‌க்கரை - 1 க‌ப
மு‌ந்‌தி‌ரி - ஒரகை‌‌ப்‌பிடி
திரா‌ட்சை - 5 எ‌ண்‌ணி‌க்க
ப‌ச்சை‌கக‌ற்பூர‌ம் - ‌சி‌றிதா‌தி‌க்கா‌ய் - ‌சி‌றித

செ‌ய்யு‌மமுற

 பா‌சி‌பபரு‌ப்‌பி‌லகோவாவகல‌ந்து  வேகவை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.
 வாண‌லி‌யி‌ல், நெ‌ய்யஊ‌ற்‌றி அ‌தி‌லமைதாவகொ‌ட்டி‌க் ‌கிள‌றி வேவை‌‌க்கவு‌ம்.

பிறகச‌ர்‌க்கரையை‌ககொ‌ட்டி‌க் ‌கிள‌றியபடியப‌ச்சை‌கக‌ற்பூர‌ம், ஜா‌தி‌க்கா‌யசே‌ர்‌த்து‌க் ‌கிளறவு‌ம்.

பி‌ன்ன‌ரஅ‌தி‌லபா‌சி‌ப்பரு‌ப்பகலவையையு‌மகொ‌ட்டி‌க் ‌கிள‌றி, ‌நிற‌பபவுட‌ர், மு‌ந்‌தி‌ரி, ‌திரா‌ட்சசே‌ர்‌த்தந‌ன்கு ‌கிள‌றி ப‌க்குவமாஇற‌க்‌கினமா‌லஅசோகஅ‌ல்வதயா‌ர்.